/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சில்மிஷம் டெலிவரி ஊழியர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம் டெலிவரி ஊழியர் கைது
ADDED : மே 31, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை
தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் 28 ம் தேதி மதியம் 'ஸ்விக்கி ஆப்' வாயிலாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவற்றை டெலிவரி செய்ய சென்ற ஊழியர் வீட்டிற்குள் நுழைந்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அங்கிருந்து தப்பினார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் 48 பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்தனர்.