/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்
/
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்
ADDED : மே 16, 2024 12:46 AM
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 41வயது பெண், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தவுடன் பைக்கில் வீட்டிற்கு வந்தார்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வரும்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென அவரது இடுப்பில் சீண்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த சித்ரா நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசில் சித்ரா கொடுத்தபுகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.