/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடம்பாக்கத்தில் கஞ்சா புழக்கம் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
/
கோடம்பாக்கத்தில் கஞ்சா புழக்கம் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
கோடம்பாக்கத்தில் கஞ்சா புழக்கம் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
கோடம்பாக்கத்தில் கஞ்சா புழக்கம் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : ஏப் 24, 2024 12:13 AM
சூளைமேடு,
கோடம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால், குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
சென்னையில், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னையின் பல பகுதிகளில், கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கஞ்சா விற்பனையாளர்கள், இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி சீரழித்து வருகின்றனர்.
குறிப்பாக, கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட டிரஸ்ட்புரம், தாஸ்புரம், வரதராஜபேட்டை, சுபேதா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.
அதேபோல், சூளைமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியார் பாதை, எம்.எம்.டி.ஏ., காலனி, பாரி தெரு, கண்ணகி தெரு, வீரபாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில், இளைஞர்கள் சாலையிலேயே கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கும் இடமாக கோடம்பாக்கம் உள்ளது. வியாபாரிகள் யாரென தெரிந்தும், போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், பல இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. குற்ற சம்பவங்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கோடம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் அமர்ந்து, கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், இரவில் சாலையில் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
சில மாதங்களாக கோடம்பாக்கம், சூளைமேடு பகுதியில், போலீசார் ரோந்து பணிகளில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இனி தொடர்ந்து ரோந்து சென்று, இதுபோன்ற சமூக விரோத செயல்களை போலீசார் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

