/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுடன் மோதல் ஆய்வாளரை கண்டித்து முற்றுகை
/
துாய்மை பணியாளர்களுடன் மோதல் ஆய்வாளரை கண்டித்து முற்றுகை
துாய்மை பணியாளர்களுடன் மோதல் ஆய்வாளரை கண்டித்து முற்றுகை
துாய்மை பணியாளர்களுடன் மோதல் ஆய்வாளரை கண்டித்து முற்றுகை
ADDED : ஆக 10, 2024 12:43 AM

அம்பத்துார், சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், 93வது வார்டில், அரக்கோணத்தை சேர்ந்த சார்லஸ் ரமேஷ் குமார் என்பவர் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் ஹரி பிரசாத் என்பவருக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் கடந்தவாரம் ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமாரை, ஹரி பிரசாத் மற்றும் துப்புரவாளர் இளையகங்கா என்பவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சார்லஸ் ரமேஷ் குமார், அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின், சார்லஸ் ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் படி ஹரி பிரசாத், இளையகங்கா ஆகிய இருவர் மீதும் ஜெ.ஜெ., நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமார் தினமும் மது போதையில் பணிக்கு வருவதுடன், இரவு நேரங்களில் பெண் துப்புரவு பணியாளர்களிடம் ஆபாசமாக பேசுவதாக, ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் புகார் அளித்தனர்.
மாநகராட்சிக்கு வரும் புகார் அழைப்புகளுக்கு சார்லஸ் ரமேஷ்குமார் ஆபாசமாக பேசி பதிலளிக்கும் வீடியோவை ஆதாரமாகவும் அளித்தனர். இதன் அடிப்படையில், சார்லஸ் ரமேஷ் குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட, 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், சார்லஸ் ரமேஷ் குமார் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்துார் மண்டல குழு தலைவர் பி.கே மூர்த்தி மற்றும் அதிகாரிகள், துப்புரவு பணியாளர்களிடம் பேச்சு நடத்தினர். 'விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதன் அடிப்படையில், அனைவரும் கலைந்து சென்றனர்.

