/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி…79.11 சதவீதம்! 33 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை
/
மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி…79.11 சதவீதம்! 33 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை
மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி…79.11 சதவீதம்! 33 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை
மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி…79.11 சதவீதம்! 33 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை
ADDED : மே 10, 2024 11:42 PM

சென்னை:மாநகராட்சி பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 79.11 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட, 0.49 சதவீதம் குறைவாக தேர்ச்சி பதிவாகியுள்ளது. அதேநேரம், 33 மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் எடுத்து, சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என, 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.20 லட்சம் பேர் படித்து வருகின்றனர்.
இதில், 2023 - 24ம் கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,858 மாணவர்கள், 3,453 மாணவியர் என, 7,311 பேர் பொதுத்தேர்வு எழுதினர்.
இவர்களில் 2,927 மாணவர்கள், 2,857 மாணவியர் என, 5,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, 79.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு 79.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் இருந்தது. கடந்தாண்டை விட மாநகராட்சி பள்ளிகளில், 0.49 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது.
பாடவாரியாக கணித பாடத்தில், 24 மாணவர்கள், அறிவியலில் நான்கு பேர், சமூக அறிவியலில் ஐந்து பேர் என, 33 மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தரமணி மேல்நிலைப் பள்ளி மற்றும் சோழவரம் உயர்நிலைப் பள்ளி, 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ரங்கராஜபுரம் உயர்நிலைப் பள்ளி, புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை, 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், தரமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 487 மதிப்பெண்களுடன் நான்காம் இடத்தையும் பிடித்தன. புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 486 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும், 192 மாணவர்கள் 451 மதிப்பெண்களுக்கு மேல், 601 மாணவர்கள் 401ல் இருந்து 450 மதிப்பெண்களும், 917 மாணவர்கள் 351ல் இருந்து 400 மதிப்பெண்கள் வரையிலும் பெற்றுள்ளனர். கனால் பேங்க் மற்றும் ரங்கராஜபுரம் உயர்நிலைப் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
ரங்கராஜபுரம் உயர்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் மாநகராட்சி பள்ளியாக உள்ளது. கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆகிய கல்வியாண்டுகளில், தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேற்கு மாம்பலம் உயர்நிலைப் பள்ளி 98.44 சதவீதமும், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்ணம்மாபேட்டை உயர்நிலைப் பள்ளி 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
ஸ்ட்ராஹன்ஸ் சாலை உயர்நிலைப் பள்ளி 97.44 சதவீதம், பாடிக்குப்பம் சாலை மற்றும் காமராஜ் அவென்யூ உயர்நிலைப் பள்ளிகள் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.