/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர் விஷ வாயு தாக்கி 'அட்மிட்'
/
துாய்மை பணியாளர் விஷ வாயு தாக்கி 'அட்மிட்'
ADDED : ஏப் 09, 2024 12:30 AM
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில், ஆவடி மாநகராட்சிக்குச் சொந்தமான பசுமை உரக்குடில் உள்ளது.
இங்கு குப்பை பதப்படுத்தப்பட்டு மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து, உரமாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக அகற்றப்படாத குப்பையை தரம் பிரிக்கும் பணியில் நேற்று காலை, நான்கு நிரந்தர துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பால் ஆபிரகாம், 55, என்பவர் மீது விஷ வாயு பாய்ந்ததில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் ஆவடி மாநகராட்சியை முற்றுகையிட்டு, துணை ஆணையர் சிவசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

