/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாஸ்டர் பிளானுக்கு துணை திட்டம் மீண்டும் ஆள் தேடுது சி.எம்.டி.ஏ.,
/
மாஸ்டர் பிளானுக்கு துணை திட்டம் மீண்டும் ஆள் தேடுது சி.எம்.டி.ஏ.,
மாஸ்டர் பிளானுக்கு துணை திட்டம் மீண்டும் ஆள் தேடுது சி.எம்.டி.ஏ.,
மாஸ்டர் பிளானுக்கு துணை திட்டம் மீண்டும் ஆள் தேடுது சி.எம்.டி.ஏ.,
ADDED : பிப் 23, 2025 08:48 PM
சென்னை:சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளானுக்கான துணை திட்டங்கள் தயாரிக்க வல்லுனர்கள் கிடைக்காததால், மீண்டும் தேடல் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த முழுமை திட்டம், 2026ல் முடிவுக்கு வருகிறது. இதனால், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள், 2021ல் துவங்கின.
இதில், சென்னை பெருநகரின், 1,189 சதுர கி.மீ.., பரப்பளவுக்கு, திடக்கழிவு மேலாண்மை, மின்சாரம், தொலை தொடர்பு பிரிவுகளில் அடுத்த, 20 ஆண்டுகளுக்கான துணை திட்டம் தயாரிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
இதற்கான வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு, சில மாதங்கள் முன் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்க வல்லுனர்கள் மற்றும் கலந்தாலோசனை நிறுவனங்கள் முன்வரவில்லை.
இதனால், வல்லுனர் மற்றும் கலந்தாலோசனை நிறுவனங்களை் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சி.எம்.டி.ஏ., மீண்டும் வெளியிட்டுள்ளது.