/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ADDED : ஜூலை 13, 2024 12:33 AM

அம்பத்துார், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 52; விவசாயி. இவரது தந்தை, கடந்த 1999ல் பூந்தமல்லி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, 80,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இது சம்பந்தமாக, பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்தில் அடமான பத்திரம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த அடமான கடனையும் 2009ல் கட்டி முடித்து, வீட்டு நில ஆவணத்தை கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளார்.
ஆனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் அடமான ஆவணம் ரத்து செய்யாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கடந்தாண்டு இறந்து விட்டார்.
மேற்படி ஆவணத்தை ரத்து செய்து தரக்கோரி, அம்பத்துார் வெங்கடாபுரத்தில் உள்ள பூந்தமல்லி - பொறுப்பு, வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர் ஆறுமுகத்தை சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கு ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தியிடம் லஞ்சமாக 40,000 ரூபாய் கேட்டுள்ளார். மேலும், 'அந்த பணத்தை டீ வாங்கி வருவதை போன்று, தேநீர் கோப்பையில் வைத்து எடுத்து வருமாறு' கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் வழிகாட்டல்படி தேநீர் கோப்பையில் கிருஷ்ணசாமி எடுத்துச் சென்ற பணத்தை ஆறுமுகம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.