/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகர் பீச்சில் காதல் ஜோடிகளிடம் போலீஸ் பெயரில் வசூல்
/
பெசன்ட் நகர் பீச்சில் காதல் ஜோடிகளிடம் போலீஸ் பெயரில் வசூல்
பெசன்ட் நகர் பீச்சில் காதல் ஜோடிகளிடம் போலீஸ் பெயரில் வசூல்
பெசன்ட் நகர் பீச்சில் காதல் ஜோடிகளிடம் போலீஸ் பெயரில் வசூல்
ADDED : மே 21, 2024 12:31 AM
சென்னை,
பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் காதலர்களிடம், 'போலீஸ்' போல நடித்து பணம் பறிக்கும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
'எக்ஸ்' தளத்தில், பாண்டி என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், 'நான் பெசன்ட் நகர் கடற்கரைக்கு மீன்பிடிக்க சென்று இருந்தேன். கடற்கரையில் காதலர்கள் நெருக்கமாக அமர்ந்து பேசியபடி இருந்தனர். அவர்களிடம், மர்ம நபர்கள், தங்களை போலீஸ் என, அறிமுகம் செய்து 5,000 ரூபாய் பறித்தனர். என்னையும் மிரட்டி பணம் வசூல் செய்தனர்' எனக் கூறியுள்ளார்.
இது, சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. கான்ஸ்டபிள் சிந்தியா, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை பெற்ற, கான்ஸ்டபிள் சத்தியசீலன், சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.