/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துார் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கம் பணி துவக்கம்
/
கொளத்துார் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கம் பணி துவக்கம்
கொளத்துார் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கம் பணி துவக்கம்
கொளத்துார் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கம் பணி துவக்கம்
ADDED : மே 09, 2024 12:09 AM

சென்னை, சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் கொளத்துார் - நாதமுனி இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைய உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2026 முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளோம்.
மாதவரம் - சோழிங்க நல்லுார் தடத்தில் 44.6 கி.மீ., துாரத்தில் பெரும்பாலான பகுதி, மேம்பால மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. இந்த பணிகள் தாமதம் இன்றி நடைபெற்று வருகின்றன. மேம்பால கட்டுமான பணிகள் வரும் 2025 பிப்ரவரியில் முடிக்க உள்ளோம்.
இந்த தடத்தில் கொளத்துார் - நாதமுனி இடையே 5 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, 1,600 கோடி ரூபாய் மதிப்பில் பணியை துவக்க உள்ளோம்.
இதற்கான, கனரக இயந்திரங்களை நிறுவி, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. விரைவில், சுரங்கம் தோண்டும் பணியை துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.