/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்புரவு பணியாளர்களுடன் ஆணைய தலைவர் ஆலோசனை
/
துப்புரவு பணியாளர்களுடன் ஆணைய தலைவர் ஆலோசனை
ADDED : மார் 08, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்டேசன், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று, ஒப்பந்த துாய்மை பணியாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
பின், வெங்கடேசன் கூறுகையில், ''துாய்மை பணியாளர்கள், பணியின்போது கையுறை, காலணி, முககவசம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பணியாற்ற, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக கிடைக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி சுகாதார பிரிவு கூடுதல் கமிஷனர் ஜெயசந்திரபானு ரெட்டி, வட்டார துணை கமிஷனர்கள் அமித், பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.