/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த கமிஷனர்
/
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த கமிஷனர்
ADDED : ஏப் 21, 2024 12:15 AM

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, மூன்று ஓட்டு எண்ணும் மையங்களிலும், நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் அடுக்கில் மத்திய ஆயுதக் காவல் படையினரும், இரண்டாவது அடுக்கில் தமிழக சிறப்பு படையினரும், மூன்றாவது அடுக்கில் சென்னை ஆயுதப் படையினரும், நான்காவது அடுக்கில் சென்னை காவல் துறை சிறப்பு பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மூன்று ஓட்டு எண்ணும் மையங்களிலும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், இணை கமிஷனர் தர்மராஜன், துணை கமிஷனர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராகாட்சிகளை ஆய்வு செய்தார்.

