/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமித்த கடைகளால் பயணியர் அவதி
/
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமித்த கடைகளால் பயணியர் அவதி
ADDED : மே 17, 2024 12:10 AM

அண்ணா நகர், அண்ணா நகர் மண்டலத்தில், கிழக்கு அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில், குடியிருப்புகள் மத்தியில் பல ஏக்கர் பரப்பில், போகன்வில்லா எனும் பெயர் கொண்ட பழமையான பூங்கா உள்ளது.
இதன் அருகில், போகன்வில்லா பூங்கா பெயரில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, '7எச், 7இ, 24ஏ' உள்ளிட்ட தடம் எண்கள் கொண்ட மாநகர பேருந்துகள் நின்று செல்லும்.
இந்த நிறுத்தத்தை, இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிறுத்தத்தை மறைத்து ஆக்கிரமிக்கும் வகையில், நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், பயணியர் பேருந்துகளில் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அண்ணா நகர் போக்குவரத்து போலீசாருக்கு பலமுறை புகார் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்பு கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

