/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டணி கட்சியினர் ஆதரவு யாருக்கு தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி
/
கூட்டணி கட்சியினர் ஆதரவு யாருக்கு தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி
கூட்டணி கட்சியினர் ஆதரவு யாருக்கு தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி
கூட்டணி கட்சியினர் ஆதரவு யாருக்கு தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி
ADDED : மார் 27, 2024 12:06 AM

செங்குன்றம், திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதியில், திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என, ஆறு சட்டசபை தொகுதிகள், 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி காங்கிரசுக்கு கிடைத்தது. அக்கட்சி வேட்பாளர் ஜெயகுமார், 6.79 லட்சம் ஓட்டுகள் பெற்று, எம்.பி., ஆனார்.
அவரை எதிர்த்து, அந்த தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், 3.55 லட்சம் ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தொகுதியில் ஜெயகுமார் மீதான அதிருப்தி காரணமாக, இந்த முறை தி.மு.க.,வே போட்டியிடும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறையும், காங்கிரசுக்கே தொகுதி கிடைத்து, 'மாஜி' ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சசிகாந்த் செந்தில் வேட்பாளரானார்.
அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு திருவள்ளூர் தொகுதி கிடைத்தது. அதன் வேட்பாளராக எழும்பூர் தனி தொகுதி 'மாஜி' எம்.எல்.ஏ., நல்லதம்பிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கண்ட இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ., வேட்பாளராக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் பொன் பாலகணபதி போட்டியிடுகிறார். அதனால், அவர் வெற்றி பெற்றால், அடிக்கடி தொகுதி பக்கம் வருவாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கியதில் அதிருப்தி இருந்தாலும், அக்கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மீது, தி.மு.க.,வினருக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளதால், கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தே.மு.தி.க., வேட்பாளருக்கு அ.தி.மு.க.,வினரின் ஆதரவு, வாழை இலை மீது தெளித்த தண்ணீர் போல், பட்டும் படாமல் உறுதியிழந்து உள்ளது. அதனால், அவர் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
பா.ஜ., வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு, அக்கட்சியினரிடம் வரவேற்பு இருந்தாலும், தொகுதி மக்களிடம் பழக்கமில்லாத நிலையே உள்ளது. அதனால், மும்முனை போட்டி நிலவும் திருவள்ளூரில் யார் ஜெயிப்பர் என்பது, அவர்களின் பிரசார யுக்தியே கைகொடுக்கும்.

