/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்பிடி ஏலத்தில் விதிமீறல் தலைவரின் கணவர் மீது புகார்
/
மீன்பிடி ஏலத்தில் விதிமீறல் தலைவரின் கணவர் மீது புகார்
மீன்பிடி ஏலத்தில் விதிமீறல் தலைவரின் கணவர் மீது புகார்
மீன்பிடி ஏலத்தில் விதிமீறல் தலைவரின் கணவர் மீது புகார்
ADDED : மே 01, 2024 12:27 AM
ஸ்ரீபெரும்புதுார்,காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட ராமானுஜபுரம் ஊராட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 800 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாயிலாக, ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க பொது ஏலம் விடுவது வழக்கம்.
இந்தாண்டு, அரசு துறை அதிகாரிகள் அனுமதியின்றி, தி.மு.க., ஊராட்சி தலைவர் சங்கீதாவின் கணவர் ராமு என்பவர் மற்றும் கிராமத்தினர் சிலர் தனிப்பட்ட முறையில் மீன்பிடிக்க ஏலம் விட, நேற்று முன்தினம் இரவு தண்டோரா போட்டுள்ளனனர்.
நேற்று காலை ஏரிக்கரையில் ஏலம் விடப்படுவதாக வந்த தகவலின்படி அங்கு சென்ற கிராமத்தினர் சிலர், 'வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் ஏன் தன்னிச்சையாக நீங்கள் ஏலம் விடுகிறீர்கள்' என கேள்வி எழுப்பினர்.
அப்போது ஊராட்சி தலைவரின் கணவர் ராமுவிற்கும், முருகன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த ராமு, முருகனை தாக்கியுள்ளார்.
இதில், காயமடைந்த முருகன், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க., ஊராட்சி தலைவரின் கணவர் ராமு மீது, சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கூறுகையில், 'வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்றார்.