/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செவிலியரை தாக்கியதாக டாக்டர் மீது புகார்
/
செவிலியரை தாக்கியதாக டாக்டர் மீது புகார்
ADDED : மே 03, 2024 12:37 AM
அமைந்தகரை, அமைந்தகரை, ஆசாத் நகரில், சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வருகிறது.
இங்கு, திருமங்கலத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி டாக்டராகவும், வடபழனியைச் சேர்ந்த உமாமகேஷ்வரி, 57, செலிவியராகவும் பணிபுரிகின்றனர்.
இருவருக்குள், பணி ரீதியாக பலமுறை வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலை, 11:00 மணியளவில் ஜோதிலட்சுமி பணிக்கு வந்த போது, உமாமகேஷ்வரி வணக்கம் வைக்காமலும், மரியாதை தராமலும் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஜோதிலட்சுமி கேட்ட போது, இருவருக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, உமாம கேஷ்வரி மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, முதலுதவி செய்தனர். பின், ஜோதிலட்சுமி தன்னை தாக்கியதாக, அமைந்தகரை போலீசில் உமாமகேஷ்வரி புகார் அளித்தார்.
விசாரணையில், மயங்கி விழுந்த உமாமகேஷ்வரியை, கன்னத்தில் தட்டி எழுப்பிய போது, அதை அவர் தவறாக புரிந்து கொண்டதாக தெரிந்தது. மேலும், சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.