நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், காஞ்சி மக்கள் அங்காடி நடத்தும் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு, 1,200 குடும்ப அட்டை உள்ளது.
இரண்டு மாதங்களாக பருப்பு, பாமாயில் முறையாக வினியோகம் செய்வதில்லை. மாதத்தில் 15ம் தேதிக்கு பின் சென்றால், அரிசி, சர்க்கரை மட்டும் தான் தருகின்றனர். மற்ற பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
அதிகாரிகளிடம் கேட்டால், உணவு பொருள் வழங்கல் கமிஷனரிடம் புகார் அளிக்க சொல்லி அலைய விடுகின்றனர். தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்.
- கே.லட்சுமி, 38, பெரும்பாக்கம்