/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி கழிவு நீர் சூழ்ந்த அங்கன்வாடி நோய் அபாயத்தில் குழந்தைகள்

ADDED : செப் 03, 2024 12:21 AM

ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் அன்னை சத்யா நகர் பிரதான சாலை பகுதியில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. திருமுல்லைவாயில் சி.டி.எச்., சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அங்கன்வாடி மையம் வாசலில் ஆறாக தேங்கி நிற்கிறது.
இதனால், குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கண் துடைப்பாக கழிவு நீர் ஓடையில் தேங்கும் கழிவுகளை அள்ளி, சாலையில் கொட்டி செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற நிரந்தரமாக வழிவகை செய்ய வேண்டும்.
- குமரேசன்,
சமூக ஆர்வலர், அண்ணனுார்.