ADDED : நவ 07, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, பாடசாலை தெரு - காமராஜர் சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மணலி மண்டலம், நகரம் - கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதி என்பதால், கால்நடை வளர்ப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, மாலை வேளைகளில் மானாவரியாக சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்குகின்றனர். வாகனங்கள் மோதி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மாநகராட்சி மற்றும் சுகாதார துறையினர் கவனித்து, கால்நடை உரிமையாளர்களை அழைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராஜேஷ், 39, மணலி.