/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலை பராமரிப்பு திருவேற்காடில் படுமோசம்
/
நெடுஞ்சாலை பராமரிப்பு திருவேற்காடில் படுமோசம்
ADDED : ஏப் 25, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதிகளில் பல மாதங்களாக, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.
இதனால், சாலையில் மணல் படுக்கை உருவாகி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் துாசி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி மண்டலமாக மாறி விடுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையோரங்களில் குவிந்துள்ள மண் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலசந்திரன், திருவேற்காடு.

