/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வேயில் வேலை ரூ.6 லட்சம் மோசடி புகார்
/
ரயில்வேயில் வேலை ரூ.6 லட்சம் மோசடி புகார்
ADDED : மே 16, 2024 12:46 AM
வடக்கு கடற்கரை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் வலியுல்லா, 50. இவரது நண்பரான அருள் ஸ்டீபன் என்பவர், ரயில்வே துறையில் உயரதிகாரிகளை தெரியும் என்றும், 10 லட்ச ரூபாய் தந்தால், உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறினார்.
அவரது ஆசை வார்த்தையை நம்பிய வலியுல்லா, கடந்தாண்டு மண்ணடியில், முதல் கட்டமாக 6.20 லட்சம் ரூபாயை, அருள் ஸ்டீபன் மற்றும் அவரது நண்பர்களான சீனிவாசன், ரபீக் ஆகிய மூவரிடமும் கொடுத்தார்.
பணம் பெற்ற பின் அருள் ஸ்டீபன் வேலைவாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தையும் திருப்பி கொடுக்காமல், தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, வலியுல்லா வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.