/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்
/
அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்
ADDED : ஏப் 16, 2024 12:10 AM
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் 'கடல்தாய் அம்மா' எனும் அ.தி.மு.க., நற்பணி மன்றம் உள்ளது.
இந்த மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 15க்கும் மேற்பட்டோர், சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தனர்.
இதையடுத்து, நற்பணி மன்றத்தின் பச்சை வண்ணத்தை அகற்றி ஆரஞ்சு வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆதிராஜாராம் என்பவர், மெரினா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், 'அ.தி.மு.க.,வினர் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரட்டும். ஆனால், அ.தி.மு.க., மன்றத்தை எப்படி பா.ஜ.,வில் அடகு வைக்க முடியும். அங்கு பா.ஜ., நிகழ்ச்சி நடத்தக்கூடாது.
'தவிர, நற்பணி மன்றத்தை மாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

