ADDED : மே 28, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, நாவலுாரில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.
அதீத போதையில், அங்கு ஆட்டோவில் குடித்து கொண்டிருந்த மூவரிடம் சென்று, வீட்டில் விடுமாறு கேட்டு உள்ளார்.
மூவரும், அருண்குமாரை வீட்டில் விடுவதாக கூறி, செம்மஞ்சேரி, ஜவஹர் நகர் அருகே கத்திமுனையில் மிரட்டி, 3 சவரன் செயினை கழட்டி தரும்படி கேட்டு உள்ளனர்.
அருண்குமார், தர மறுக்கவே, அவரை கத்தியால் வெட்டி, செயினை பறித்து தப்பினர்.
செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.