/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெடிகுண்டு தயாரிக்க ரவுடிகள் பயிற்சி: கைதான 'மாடு' சங்கர் வாக்குமூலம்
/
வெடிகுண்டு தயாரிக்க ரவுடிகள் பயிற்சி: கைதான 'மாடு' சங்கர் வாக்குமூலம்
வெடிகுண்டு தயாரிக்க ரவுடிகள் பயிற்சி: கைதான 'மாடு' சங்கர் வாக்குமூலம்
வெடிகுண்டு தயாரிக்க ரவுடிகள் பயிற்சி: கைதான 'மாடு' சங்கர் வாக்குமூலம்
UPDATED : ஜூன் 22, 2024 06:23 AM
ADDED : ஜூன் 22, 2024 01:05 AM

சென்னை:சென்னையில் நேற்று முன்தினம், நாட்டு வெடிகுண்டுகள், கத்திகளுடன் சுற்றிய ரவுடிகள் மாடு சங்கர், 46, ஆடு சுரேஷ், 39, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மாடு சங்கர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்தவர், குமரன், 33; ரவுடி. அவர் தொழிற்சாலை கழிவு இரும்புகளை வாங்கி, மறுசுழற்சி செய்து பொருட்கள் தயாரிக்க, 'பி.பி.ஜி., ரீசைக்கிளிங் என்டர்பிரைசஸ்' எனும் தொழிற்சாலையை நடத்தினார்.
அவரின் வலது கரமாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 43, இருந்து வந்தார்.
குமரனும், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி வைரவன் என்பவரும் சேர்ந்து, பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர்; அதில் பகைவர்களாக மாறினர்.
கடந்த, 2016ல், வைரவன் உத்தரவின்படி மதுரை கூலிப்படையினரால் நாட்டு வெடிகுண்டுகள் வீசி, குமரன் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் விதமாக, சங்கர் தலைமையில், வைரவனின் கூட்டாளி வெங்கடேசன் தீர்த்து கட்டப்பட்டார்.
இதனால், சங்கரின் உயிருக்கு, வைரவன் கூட்டாளிகள் குறி வைத்தனர். அவரை சங்கரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் உதயகுமார், சாந்தகுமார் முக்கிய பங்கு வகித்தனர். சமீபத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் இறந்து விட்டார்.
சாந்தகுமார், உதயகுமார் தலைமையில் ஒன்பது ரவுடிகள் செயல்பட்டனர். அவர்கள், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளித்தனர். அவர்களிடம் சென்னையைச் சேர்ந்த ரவுடிகளும் பயற்சி எடுத்துள்ளனர்.
ரவுடிகளுக்கு, 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பில், அந்த பயிற்சி முறையை செய்து காட்டியதுடன், ஒரு நாட்டு வெடிகுண்டு, 15,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
கடந்தாண்டு ஏப்ரலில், வெங்கடேசனின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில், சங்கரின் உயிருக்கு நாள் குறித்து, சென்னை நசரத்பேட்டை அருகே காரில் சென்ற சங்கர் மீது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அவரை தீர்த்துக் கட்டினர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.