/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒயிட்ஸ் சாலை போக்குவரத்தை திடீரென மாற்றியதால் குழப்பம்
/
ஒயிட்ஸ் சாலை போக்குவரத்தை திடீரென மாற்றியதால் குழப்பம்
ஒயிட்ஸ் சாலை போக்குவரத்தை திடீரென மாற்றியதால் குழப்பம்
ஒயிட்ஸ் சாலை போக்குவரத்தை திடீரென மாற்றியதால் குழப்பம்
ADDED : ஆக 05, 2024 01:18 AM

சென்னை, மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக, சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இம்மாற்றம் குறித்து, அனைத்து தரப்பினரும் அறியும் வகையில், போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆனால், ஒயிட்ஸ் சாலை பகுதியில் எந்தவித அறிவிப்புமின்றி, திடீரென போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால், வாகன ஓட்டிகள் நேற்று மிகவும் சிரமப்பட்டனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஒயிட்ஸ் சாலையில் சத்தியம் திரையரங்கு மட்டுமின்றி யூனியன் வங்கி, தனியார் நிறுவனங்கள் என, ஏராளமானவை உள்ளன.
அவற்றிற்கு செல்வோர், அண்ணா சாலை, திரு.வி.க., சாலை வழியாக வந்து ஒயிட்ஸ் சாலையில் இடது புறம் திரும்பிச் செல்லும்படி இருக்கும்.
இந்நிலையில் நேற்று, திரு.வி.க., சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திடீரென தடுப்பு வைத்து, அச்சாலையை போலீசார் மூடினர்.
இதனால், வழக்கம்போல ஒயிட்ஸ் சாலைக்கு வாகனங்களில் வந்தோர் அனைவரும், பீட்டர் சாலை, வெஸ்ட் காட் சாலை வழியாக சுற்றி, ஒயிட்ஸ் சாலையை அடைந்தனர்.
தற்போது, அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள், ஸ்பென்சர் முன் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 'யு - டர்ன்' செய்து ஸ்மித் சாலை வழியாக சென்று, வலது புறம் அல்லது இடது புறம், ஒயிட்ஸ் சாலைக்கு செல்லலாம்.
ஒயிட்ஸ் சாலையிலிருந்து அண்ணா சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பட்டூல்லாஸ் சாலை வழியாக, அண்ணா சாலையை அடையலாம்.
இவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். பொதுவாக, போக்குவரத்து மாற்றம் செய்யும்போது வாகன ஓட்டிகளுக்கு, முன்னரே தெரியப்படுத்துவர். அதற்கேற்ப மாற்றுவழியில் செல்வோம்.
ஆனால் தற்போது, எந்தவித முன்னெச்சரிக்கையும் அளிக்காமல் திடீரென மாற்றப்பட்டதால் சிரமம் ஏற்பட்டது. வரும் காலங்களில், போக்குவரத்து மாற்றத்தை முறையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.