/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில்களில் புழுக்கம்? 'ஏசி' அளவு கண்காணிக்கும் குழு
/
மெட்ரோ ரயில்களில் புழுக்கம்? 'ஏசி' அளவு கண்காணிக்கும் குழு
மெட்ரோ ரயில்களில் புழுக்கம்? 'ஏசி' அளவு கண்காணிக்கும் குழு
மெட்ரோ ரயில்களில் புழுக்கம்? 'ஏசி' அளவு கண்காணிக்கும் குழு
ADDED : மே 29, 2024 12:39 AM
சென்னை, சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் மூன்று லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் அலுவலக நேரங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் உள் பகுதியில் 'ஏசி' குறைக்கப்பட்டுள்ளதாக பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவனம், சிறப்பு அலுவலர்கள் குழுவை நியமித்து, 'ஏசி' அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் 'ஏசி' அளவும் குறைக்கப்படவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயணியருக்கு 'ஏசி' குறைந்திருப்பது போல் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தொழில்நுட்ப சிறப்பு பிரிவு அலுவலர்கள் கொண்ட குழுவினர் 'ஏசி' அளவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான அளவுக்கு இதமான குளிர் இருக்கும் வகையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.