/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிந்தாதிரிப்பேட்டையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தினமும் திணறல்
/
சிந்தாதிரிப்பேட்டையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தினமும் திணறல்
சிந்தாதிரிப்பேட்டையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தினமும் திணறல்
சிந்தாதிரிப்பேட்டையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தினமும் திணறல்
ADDED : ஆக 22, 2024 12:24 AM

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையின் இருபுறமும், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
அண்ணாசாலை -- எழும்பூர், காந்தி இர்வின் சாலையை இணைக்கும் சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில் மீன் மார்க்கெட், உணவகங்கள், மருந்தகங்கள் என, நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ளன.
அவற்றுக்கு வருவோர், தங்களின் வாகனத்தை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்திவிட்டுச் செல்வதால், அங்கு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சாலையில் தற்போது, மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் சாலை குறுகியுள்ளதால், நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்வோர், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.