/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தார்ச்சாலை இணைத்தால் நெரிசல் குறைய வாய்ப்பு
/
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தார்ச்சாலை இணைத்தால் நெரிசல் குறைய வாய்ப்பு
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தார்ச்சாலை இணைத்தால் நெரிசல் குறைய வாய்ப்பு
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தார்ச்சாலை இணைத்தால் நெரிசல் குறைய வாய்ப்பு
ADDED : ஜூன் 13, 2024 05:22 PM
திருவொற்றியூர் : பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய, 6 கி.மீ., துார தார்ச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர் குப்பை மேடு துவங்கி, வெற்றி விநாயகர் நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர், மணலி விரைவு சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், வி.பி., நகர், முல்லை நகர், எர்ணாவூர், எண்ணுார் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி தார்ச்சாலை உள்ளது.
இச்சாலை அகலமில்லாமல், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், படுமோசமாக உள்ளது.
எர்ணாவூர் பின்புறம் உள்ள தார்ச்சாலையை முட்செடிகள் மூடி, புதர் மண்டி போய் உள்ளது.
ஆள் நடமாட்டம் ஏதுமில்லாததால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருவதால், இந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை.
இதனிடையே, 6 கி.மீ., துார சாலை திருவொற்றியூர், மணலி, எண்ணுார் ஆகிய மூன்று பகுதிகளை எளிதாக இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது.
இச்சாலையை முறையாக செப்பனிட்டு, அகலப்படுத்தி பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கும் பட்சத்தில், திருவொற்றியூரின் பேசின் சாலை, மணலி விரைவு சாலை, எண்ணுாரின் கத்திவாக்கம் நெடுஞ்சாலை போன்ற சாலைகளில், போக்குவரத்து வெகுவாக குறையும்.
மேலும் மணலி, திருவொற்றியூர், எண்ணுார் செல்லும் வாகன ஓட்டிகளின் பயண துாரம் மற்றும் விபத்துகள் பெருமளவில் குறையும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தார்ச்சாலையை சீரமைத்து, பொது போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

