ADDED : மே 01, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர் மோடி, 'காங்., ஆட்சிக்கு வந்தால், இந்திய பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள்' என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு காங்., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் நேற்று மாலை, கொளத்துார் அகரம் சந்திப்பில், வடசென்னை மேற்கு மாவட்ட மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகிளா காங்., தலைவி சுகன்யா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.