ADDED : மே 08, 2024 12:14 AM
அ நிறம் | அளவு
மடிப்பாக்கம், மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில், எட்டு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்ட கட்டடத்தின் சிமென்ட் கழிவுகள், தெருவோரம் குவிக்கப்பட்டு இருந்தன. இந்த கழிவுகள் நேற்று முன்தினம் வரை அகற்றப்படாமல், அதே இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தன.
இதனால், வாகனங்களில் பயணிக்கும் தெருவாசிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணியளவில், மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவுபடி, கட்டட கழிவுகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி, லாரியில் ஏற்றிச் சென்றனர். இதனால், அப்பகுதி வாசிகள் நிம்மதியடைந்தனர்.
