/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குரோம்பேட்டை சிக்னலில் தொடரும் நெரிசல் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை
/
குரோம்பேட்டை சிக்னலில் தொடரும் நெரிசல் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை
குரோம்பேட்டை சிக்னலில் தொடரும் நெரிசல் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை
குரோம்பேட்டை சிக்னலில் தொடரும் நெரிசல் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை
ADDED : பிப் 27, 2025 01:15 AM
குரோம்பேட்டை,குரோம்பேட்டை சிக்னலில், யு - டர்ன் எடுக்க தடை விதித்து தடுப்பு அமைத்தும், பீக் ஹவர் நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையாததால், அப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
குரோம்பேட்டையில், மண்டல அலுவலகத்திற்கு செல்லும் இடத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில், சாலையின் மேற்கில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம், 'யு - டர்ன்' எடுத்து, தாம்பரம் நோக்கியும், சாலையின் கிழக்கில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி, மண்டல அலுவலக சாலைக்கும் செல்கின்றன.
ஒரே நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலையின், மேற்கு - கிழக்கு பகுதியாக வரும் வாகனங்கள், 'யு - டர்ன்' எடுப்பதால், எப்படி செல்வது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர்.
சில நேரங்களில், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும், தடுமாறி கீழே விழுவதும் தொடர்கிறது.
தொடர்ந்து, இப்பிரச்னை நிலவுதால், அந்த இடத்தில், குரோம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் 'யு - டர்ன்' எடுத்து, மண்டல அலுவலக சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அங்கு நெரிசல் குறையவில்லை.
அதனால், சிக்னல் அமைந்துள்ள இடத்தில், வாகனங்கள் சிரமமின்றி திரும்பி செல்ல வசதியாக, சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி தலைமையில், நேற்று நடந்தது.
இதில், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து போலீஸ், மின் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், சிக்னல் சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

