ADDED : ஜூலை 09, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,திருவொற்றியூர், இந்திரா நகர் - கரிமேடு அருகே, மத்திய அரசிற்கு சொந்தமான சரக்கு பெட்டக முனையம் உள்ளது. இங்கு, 120 ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில், சம்பள உயர்வு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, ஒப்பந்த ஊழியர்கள் 15 மாதங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். நிர்வாகம், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த ஊழியர்கள், சி.ஐ.டி.யு., சங்கத்தினருடன் இணைந்து, நேற்று மதியம், நிறுவன வாயில் முன், பதாகைகள் ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் குறித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.