/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மிக்ஜாம்' மீட்பு பணிக்கான தொகை தராததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
/
'மிக்ஜாம்' மீட்பு பணிக்கான தொகை தராததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
'மிக்ஜாம்' மீட்பு பணிக்கான தொகை தராததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
'மிக்ஜாம்' மீட்பு பணிக்கான தொகை தராததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
ADDED : ஜூலை 31, 2024 12:07 AM
சென்னை,கடந்தாண்டு 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால், சென்னை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக, ஓ.எம்.ஆரில் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதி மக்கள், வீடுகளில் இருந்து வெளியே வர, நான்கு நாட்களானது.
இங்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு உணவு, மின்சாதன பொருட்கள், சேதமடைந்த குழாய், குடிநீர் தொட்டி சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை, 10க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டன.
இவர்கள் தங்கள் பணத்தை போட்டு செலவு செய்துள்ளனர். ஏழு மாதம் கடந்தும், வாரியம் அவர்களுக்கான பணம் வழங்கவில்லை.
இதனால், தற்போது அதிகாரிகள் உத்தரவிடும் அவசரப்பணிகளை செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
இது குறித்து, ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: மக்களின் தவிப்பு அறிந்து, எங்கள் பணத்தை போட்டு மழைக்கு செலவு செய்தோம்.
அதிகாரிகள் உத்தரவு போடும்போதெல்லாம் வடிகால் துார் வாருவது, அவசர சீரமைப்பு பணிகளை செய்து கொடுக்கிறோம். இருந்தும் மழைக்கு செலவு செய்த பணம், ஜி.எஸ்.டி., செலுத்தியபின் தர வேண்டிய பணத்தை தரவில்லை. இப்போது அதிகாரிகள் கூறும் அவசர பணிகளை, வங்கியில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மழைக்கு செலவு செய்த பணத்தை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு கோப்புகள் அனுப்பி உள்ளோம். வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும்,'' என்றனர்.