/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி
/
பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி
பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி
பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி
ADDED : மார் 08, 2025 12:43 AM
அமைந்தகரை, அமைந்தகரை, எம்.எம்., காலனியைச் சேர்ந்தவர் தீபக், 30; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, குடும்பத்தினரால் தாம்பரத்தைச் சேர்ந்த நிவேதா, 25, என்பவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதனால், தீபக், நிவேதா இருவரும் பேசி பழகினர்.
இம்மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இரு குடும்பத்தாரின் கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலான இருவரும், வீட்டிற்கு தெரியாமல் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டு, இரவே அமைந்தகரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரின் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.