/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றியின் கீழ் இறந்து கிடந்த பசு
/
மின்மாற்றியின் கீழ் இறந்து கிடந்த பசு
ADDED : செப் 05, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அண்ணா நகரில், விக்னேஷ், 45, என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இவரது எட்டு மாத சினை பசு மாடு, வீட்டருகே உள்ள மின்மாற்றியின் கீழ், உயிருக்கு போராடியது. திருமுல்லைவாயில் போலீசார், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள், மின்சாரம் பாய்ந்து பசு மாடு இறந்ததாக தகவல் பரவியது. 45 நிமிடங்கள் தாமதமாக வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர்.
விசாரணையில், மின்சாரம் பாய்ந்து மாடு இறக்கவில்லை என்பது தெரிந்தது. மர்மமான முறையில் மாடு இறந்தது குறித்து விசாரணை நடக்கிறது.