ADDED : ஜூன் 28, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சியில் நேற்று இரண்டாவது நாளாக, ஆவடி பேருந்து நிலையத்தில் திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் நான்கு மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆவடி பேருந்து நிலையம் அருகே, 10க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்திருந்தன.
போக்குவரத்து போலீசார் அவற்றை விரட்டினர். அப்போது மாடுகள் மிரண்டு, சாலையில் தாறுமாறாக ஓடின. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அப்போது பெண் மற்றும் முதியவர் ஒருவரை கன்றுக்குட்டி ஒன்று முட்ட வந்தது. இருவரும் சுதாரித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.