ADDED : ஜூன் 12, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
‘ஜாக்கி’ திருட முயன்ற மூவர் கைது
கே.கே.நகர்: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப்பணி, ஆற்காடு சாலையில் நடந்து வருகிறது. பணியிடத்தில் வைக்கப்பட்டிருந்த தலா 20 கிலோ உடைய நான்கு இரும்பு ஜாக்கிகளை, கடந்த 10ம் தேதி இரவு, விஷ்ணு, 19, மற்றும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள், திருட முயன்றனர்.
காவலாளி சிவசங்கர் தடுத்தபோது, அவரை தாக்கி தப்பிக்க முயன்றனர். பணியில் இருந்தோர் அவர்களை பிடித்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவர்களை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
