ADDED : மே 01, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
நண்பருக்கு வெட்டு: 2 பேர் கைது
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், நாராயணசாமி தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 30. இவருக்கும், அவரது நண்பரான ஹரிஷ், 23, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த மாதம் 20ம் தேதி, இப்பகுதி காளியம்மன் கோவில் தெருவில், டீ கடையில் நின்றிருந்த விக்னேஷை, ஹரிஷ் உட்பட ஆறு பேர் கத்தியால் குத்தி தப்பினர்.
விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து ஹரிஷ், 23, சின்னதம்பி, 25, திருநாவுக்கரசு, 25, ஆகியோரை, கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய குன்றத்துாரைச் சேர்ந்த விவின் கேபா, 23, தீனா, 24, ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
