தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூன் 11, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேகத்தடையால் வாலிபர் உயிரிழப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவைச் சேர்ந்த சண்முகம், 25, நேற்று முன்தினம் இரவு, ‘டி.வி.எஸ்., ஜூபிடர்’ ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பூ நாகாத்தம்மன் கோவில் அருகே, வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஸ்கூட்டர் நிலைதடுமாறியதில் துாக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயமடைந்தார். தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

–––

மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

பல்லாவரம்: திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையத்தைச் சேர்ந்த சண்முகம், 52, குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி, பல்லாவரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டு மாடியில் துாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

––

புழலில் வாலிபர் இறப்பு

புழல்: மதுரையைச் சேர்ந்த பெயின்டர் சரவணபாண்டி, 27, புழல் –- அம்பத்துார் சாலையில் உள்ள ‘சில்வர் ஸ்கை’ என்ற புதிய கட்டடத்தில், பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

கடந்த 7ம் தேதி இரவு, இரண்டாவது மாடியில் இருந்து மொபைல்போனில் பேசிய படியே இறங்கினார். அப்போது தவறி விழுந்த சரவணபாண்டிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

––

4 நாளே ஆன குழந்தை உயிரிழப்பு

ஆர்.கே.பேட்டை: ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த தேவா மனைவி அர்ச்சனாவுக்கு, 22, திருத்தணி அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் உள்ள தாய் வீட்டில் தங்கியருந்த அர்ச்சனாவின் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வங்கனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

–––

தலைமறைவு குற்றவாளி இருவர் கைது

பெரம்பூர்: பெரம்பூர், முனியப்பன் தெருவைச் சேர்ந்த தீனாகுமார் என்ற நண்டு, 32, அயனாவரம் ரூபன் ராஜ், 31, ஆகியோர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்தாண்டு இறுதியில், வழக்கு ஒன்றில் இருவரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

–––

வழிப்பறி திருடர்கள் இருவர் கைது

திருவல்லிக்கேணி: சேப்பாக்கம், மசூதி தெருவைச் சேர்ந்தவர் முகமது உபேஸ், 38; திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 9ம் தேதி இரவு, அலுவலகம் முன் வாகனத்தை நிறுத்தி, உள்ளே செல்ல முயன்றபோது, பின்னால் வந்த இருவர், அவரது பண பையை பறித்து தப்பினர்.

திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து, இந்த வழிப்பறியில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், 25, நிதீஷ்குமார், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர். 2 லட்சம் ரூபாய், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

–––

வாலிபர்களிடம் மொபைல் போன் பறிப்பு

பெரம்பூர்: பெரம்பூரில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள பீஹாரைச் சேர்ந்த சுக்ரீவ்குமார், பேகன்குமார் ஆகியோர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ‘டாஸ்மாக்’ கடை மதுக்கூடத்தில் மது அருந்தினர். அங்கிருந்த இருவர், பீஹார் வாலிபர்களிடம் தகராறு செய்து அவர்களது மொபைல் போன்களை பறித்து தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us