ADDED : ஜூன் 16, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
ஆட்டோ மோதி போலீஸ்காரர் காயம்
குரோம்பேட்டை: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன், 31, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரர்.
நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ், இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அணுகு சாலையில் இருந்து வந்த ஆட்டோ, அவர் மீது மோதியது.
இதில், போலீஸ்காரர் மணிகண்டனின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், ஆட்டோ ஓட்டுநரான அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 25, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
