ADDED : ஜூன் 25, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
வேன் மோதி பாதசாரி பலி
குன்றத்துார்: திருமுடிவாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே, 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர், நேற்று அதிகாலை நடந்து சென்றார்.
அப்போது, ஒரகடத்தில் இருந்து திருமுடிவாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த ‘ஈய்ச்சர்’ வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே வாலிபர் இறந்தார்.
வாகனத்தை ஓட்டி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேஷ், 29, என்பவரை, குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
