ADDED : ஜூலை 03, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை
ஆலந்துார்: பரங்கிமலை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.
வினோத்குமார், 35, என்பவர், அப்பெண்ணிடம் பழகிவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன், குழந்தைகளை கொன்று விடுவதாக அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பரங்கிமலை மகளிர் போலீசார், வினோத்குமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
