ADDED : ஜூலை 09, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
குடும்பத் தகராறில் கணவர் தீக்குளிப்பு
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், 35; அச்சக கூடத்தில் கூலி தொழிலாளி. இவரது மனைவி சூர்யகலா. தம்பதிக்கு இரு மகள்கள்.
நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த அய்யனாருக்கும், அவரது மனைவி தகராறு ஏற்பட்டது.
இதனால் அய்யனார், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தீக்குளித்தார். 40 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
