தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 17, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லாரியில் பைக் மோதி வாலிபர் பலி

மதுரவாயல்: கொளத்துாரைச் சேர்ந்த பிரவீன் குமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் யமஹா எம்.டி., பைக்கில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பை – பாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே சென்ற போது, பழுதாகி சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால், பிரவீன்குமாரின் பைக் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஸ்கூட்டர் திருடியவர் சிக்கினார்

பூக்கடை: பூங்கா நகர், என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக ஊழியர் தீபமாலா, 45. கடந்த 3ம் தேதி காலை அலுவலகத்தின் முன், நிறுத்தியிருந்த அவரது ‘ஹோண்டா ஆக்டிவாʼ ஸ்கூட்டர் திருடு போனது. இது குறித்து விசாரித்த பூக்கடை போலீசார், திருட்டில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, வீரா குட்டி தெருவைச் சேர்ந்த விக்ரம், 38, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

காவலாளியை தாக்கியவர் கைது

ராயப்பேட்டை, பாரதி சாலையில் உள்ள அமீர் மஹாலில் காவலாளியாக பணிபுரிபவர் முகமது நஜ்ரூல் இஸ்லாம், 40. கடந்த 15ம் தேதி மஹாலில் வசித்து வரும் ஜாகிர் பாஷா, 41, மதுபோதையில் நண்பர் ஒருவரை அழைத்து வந்துள்ளார். அப்போது நண்பரை அனுமதிக்க முடியாது என, காவலாளி திட்டவட்டமாக தெரிவித்தார். ஆத்திரமடைந்த ஜாகிர் பாஷா கீழே கிடந்த கல்லை எடுத்து, காவலாளி முகமது நஜ்ரூல் இஸ்லாமை தாக்கினார். இது குறித்து விசாரித்த அண்ணாசாலை போலீசார் ஜாகிர் பாஷாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us