தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 20, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* தேனாம்பேட்டையைச் சேர்ந்த கலைமணி, 45, ஆரோக்கியமேரி என்பவரிடம் இருந்து பைக் மெக்கானிக் கடையை வாங்கி நடத்தி, எம்.கே., ராதா நகரில் வருகிறார். கடையை காலி செய்ய சொல்லி, கலைமணியை தாக்கிய ஆரோக்கியமேரியின் பேரன் செந்தில்குமாரை, 47, போலீசார் நேற்று கைது செய்தனர்.

––––

* வள்ளுவர்கோட்டம் பகுதியில் ஒரு பழச்சாறு கடைக்கு நேற்று முன்தினம் சென்ற தமிழரசன், 36, மற்றும் சந்துசிங், 34, ஆகியோர், பன்னீர் பப்ஸ் கேட்டுள்ளனர். இல்லை என்றதும், கடை ஊழியர்களான இரு பெண்களை ஆபாசமாக பேசி தாக்கினர். நுங்கம்பாக்கம் போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.

––––

* கலங்கரை விளக்கம் அருகே, மெரினா கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற ஆட்டோவில் இருந்து 42 கிலோ மாவா உள்ளிட்ட போதை பொருட்களை, போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். மாங்காடு ஜாகீர் உசேன், 48, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ்குமார், 28, ஆகியோரை கைது செய்தனர்.

கிரைம் கார்னர்

பஸ் நிறுத்தத்தில் முதியவர் சடலம்

கொளத்துார்: ரெட்டேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ராஜமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

**

போதை பொருள் கடத்தல்: 64 பேர் கைது

சென்னை: சென்னையில், போதை பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தவர்கள் மீது, ஏழு நாட்களில், 38 வழக்குகள் பதிவு செய்து, 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 66 கிலோ கஞ்சா, 5 கிலோ கஞ்சா சாக்லேட், 921 போதை மாத்திரைகள், 12 மொபைல் போன்கள், 66,100 ரூபாய் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவை, பறிமுதல் செய்யப்பட்டன.

**

வாலிபரை வெட்டி பைக் பறிப்பு

வழிப்பறி கும்பல் அட்டூழியம்

புளியந்தோப்பு, ஜூலை 21– 

வாலிபரை கத்தியால் வெட்டி பைக்கை பறித்து சென்ற வழிப்பறி கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

புளியந்தோப்பு, திரு.வி.க., நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் ரிஷிந்தர், 22. ஆடுதொட்டியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி விளையாட்டை புரொஜக்டர் மூலம் ஒளிபரப்பு செய்வதை பார்க்க சென்றார். புளியந்தோப்பு வ.உ.சி., நகர் 10வது தெரு வழியாக செல்லும்போது, நான்கு பேர் ரிஷிந்தரை வழிமறித்து, கத்தியால் வெட்ட முயற்சி செய்து உள்ளனர்.

ரிஷிந்தர் அதை தடுக்கவே, வலது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தன் பைக்கை அந்த இடத்திலேயே போட்டு விட்டு, ரிஷிந்தர் தப்பினார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த கும்பல் ரிஷிந்தரின் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. காயமடைந்த ரிஷிந்தர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us