ADDED : ஜூலை 31, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
4வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
எண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 44வது பிளாக்கை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ், 41. நேற்று முன்தினம் மது போதையில், நான்காவது மாடி பால்கனியில் நின்று, மொபைல் போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடினார். ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால், ஆட்டோ மூலம் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக கூறினார்.
