/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்லையம்மன் கோவிலில் தீ மிதி விழா விமரிசை
/
எல்லையம்மன் கோவிலில் தீ மிதி விழா விமரிசை
ADDED : ஆக 05, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,
பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், பழமை வாய்ந்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது.
இந்தாண்டு தீமிதி விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 10ம் நாளான நேற்று தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனை தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா பூவை ஞானம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.