/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை மிரட்டி தகாத உறவுக்கு அழைத்த கடலுார் வாலிபர் கைது
/
பெண்ணை மிரட்டி தகாத உறவுக்கு அழைத்த கடலுார் வாலிபர் கைது
பெண்ணை மிரட்டி தகாத உறவுக்கு அழைத்த கடலுார் வாலிபர் கைது
பெண்ணை மிரட்டி தகாத உறவுக்கு அழைத்த கடலுார் வாலிபர் கைது
ADDED : மார் 13, 2025 12:32 AM

எண்ணுார், பெண்ணின் ஆபாச புகைப்படங்களை, 'ஸ்னாப் சாட்' செயலி வழியாக வாங்கி, வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி, தவறான உறவுக்கு அழைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவியான, 20 வயது பெண்ணுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், 'ஸ்னாப் சாட்' செயலி வழியாக, கடலுாரைச் சேர்ந்த தமீம் கான், 23, என்பவர் பழக்கமாகி உள்ளார்.
செயலி வழியாக பேசி வந்த நிலையில், பெண்ணிடம் சாதுர்யமாக பேசி, அவரது அரை நிர்வாண படத்தை வாங்கிய வாலிபர், தன் நண்பர்களுக்கு ஆறு பேருக்கு அனுப்பியுள்ளார்.
பின், மொபைல் போன் வழியாக தொடர்பு கொண்டு, தவறான உறவுக்கு அழைத்துள்ளார். இல்லாவிட்டால், ஆபாச படத்தை, ஆன்லைனில் பரப்பி விடுவேன் என தமீம் மிரட்டியுள்ளார்.
மாணவி அளித்த புகாரில், எண்ணுார் போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்தனர். எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கடலுார் சென்று, பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த, கடலுாரைச் சேர்ந்த தமீம் கான், 24, என்பவரை, நேற்று காலை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான நண்பர்கள் ஆறு பேரையும், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
***