/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருவருக்கு வெ ட்டு: மர்ம நபர்களுக்கு வலை
/
இருவருக்கு வெ ட்டு: மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 29, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன், 35, மோனிஷ், 34. நண்பர்களான இருவரும், நேற்று அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த மூவர் கும்பல், இருவரையும் தலையில் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.