/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முட்புதர் மண்டிய மின் மாற்றியால் ஆபத்து ?
/
முட்புதர் மண்டிய மின் மாற்றியால் ஆபத்து ?
ADDED : ஆக 06, 2024 01:03 AM

திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, எர்ணாவூர் - பாலாஜி நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, மின்மாற்றியில் இருந்து, மின் கேபிள்கள் மற்றும் ஒயர் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாலாஜி நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து, அபாயகரமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக, ஊழியர்களே மின்மாற்றியை நெருங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, மின்மாற்றியை சுற்றியுள்ள முட்புதரை உடனடியாக அகற்ற வேண்டும்.
- கே.சாய்ராம், 51,
சமூக ஆர்வலர், எர்ணாவூர்
செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி, கங்கை அம்மன் கோவில் தெருவில், கோவிலுக்கு அருகே உள்ள இரண்டு மின்மாற்றிகளின் துாண் ஒன்று, உறுதியிழந்து சேதமடைந்துள்ளது. புழல் மின் வாரிய அலுவலகம் புதிய மின்மாற்றியை அமைத்து, அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும்.
- சங்கர்,
புள்ளிலைன் கிராமம்